ஊட்டி-குன்னூர் மலை ரயிலில் ஆளுநர் பயணம்

ஊட்டி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தங்கியுள்ளார். நேற்று பிற்பகல் 12.15 மணிக்கு குன்னூர் செல்லும் மலை ரயிலில் ஊட்டியில் இருந்து குன்னூருக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர். பயணிகள் செல்லும் பெட்டியிலேயே அமர்ந்து பயணித்தார். ஆளுநர் ரயிலில் சென்றதை தொடர்ந்து, ஊட்டி ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னதாக, அவர் ராஜ்பவன் மாளிகையில் இருந்து ரயில் நிலையம் வரும் வரை, ஊட்டி – மைசூர் சாலையில் ஹில்பங்க் முதல் மத்திய பஸ் நிலையம் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ரயிலில் ஆளுநருடன் பயணித்த சுற்றுலா பயணிகள் தொலைவில் இருந்து புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர்.

The post ஊட்டி-குன்னூர் மலை ரயிலில் ஆளுநர் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: