பொள்ளாச்சி அருகே 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மற்றும் கோட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி கேரளாவுக்கு கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை (புட்செல்) போலீசார் கண்காணிப்பு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று, கோவை மண்டல எஸ்.பி., பாலாஜி மேற்பார்வையில், பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார், ஆனைமலை டு கோட்டூர் ரோடு கோட்டூர் மொசவம் பாறை பகுதியில் உள்ள, அரசு துவக்கப்பள்ளி அருகே கண்காணித்து வந்தனர். அப்போது, ன்புள்ள மறைவிடத்திலிருந்து மொபைட்டில் மூட்டைகளை இருவர் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள், திவான்சா கொடூரை சேர்ந்த ராஜபாண்டி, தாபால் பாண்டி என தெரியவந்தது.

அவர்கள் பதுக்கி வைத்திருந்த மூட்டைகளைப் பிடித்து பார்த்தபோது அதில் மொத்தம் ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்டறிந்தனர். அவர்கள் கோட்டூர் சுற்று வட்டார பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசிகளை வாங்கி, அதனை கேரளாவில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி பதுக்கி கேரளாவுக்கு கடத்த முடிந்த ராஜபாண்டி, பால்பாண்டி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 1000 கிலோ ரேஷன் அரிசிபறிமுதல் செய்தனர்.

The post பொள்ளாச்சி அருகே 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: