புளியைப் பயன்படுத்துவது எப்படி?

மழை மற்றும் குளிர் காலங்களில் புளி பிசுபிசுப்பாக இருக்கும். அந்த சமயங்களில் தையல் இலைகளில் புளியை வைத்தால் புளி பிசுபிசுப்பு பிரச்னை வராது.மளிகைக் கடையில் விற்கப்படும் மந்தார இலை என்னும் தையல் இலையை புளி வைத்திருக்கும் பானையில் போட்டு வைத்தால் புளி நெடுநாட்களுக்குக் கெட்டுப் போகாமல் இருக்கும். புளியைப் போட்டு வைக்கும் பாத்திரத்தின் அடியில் கொஞ்சம் உப்பைப் போட்டு வைத்தால் கெடாமல் இருக்கும்
அசைவம் சமைத்த பிறகு பாத்திரங் களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவி, பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும். புளி, உப்பு, வெல்லம் போன்ற பொருட்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் வைப்பதைத் தவிர்க்கவும். இவை பிளாஸ்டிக்குடன் சேர்ந்து ரசாயன மாற்றம் ஏற்பட்டு, ஆரோக்கியத்துக்கும் கெடுதல் ஏற்படுத்தும். கண்ணாடி அல்லது பீங்கான் டப்பாக்களில் வைப்பது நல்லது.

வெள்ளரிக்காய் பாயசம்

தேவையானவை:

வெள்ளரிக்காய் – ஒன்று
பால் – 250 மில்லி
சர்க்கரை – தேவையான
அளவு
அரிசி மாவு – 3 டீஸ்பூன்
பாதாம் மிக்ஸ் – ஒரு
டேபிள்ஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
ஏலக்காய் – 2
முந்திரி – தேவையான அளவு.

செய்முறை:

வெள்ளரிக்காயைத் துருவி வைத்துக்கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆற வைத்துக்கொள்ளவும். அரிசி மாவு, பாதம் மிக்ஸை சிறிது தண்ணீரில் ஒன்றாகக் கலக்கி வைத்துக்கொள்ளவும். முந்திரியை ஒரு டீஸ்பூன் நெய்யில் வறுத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, வெள்ளரிக்காயை மீதமிருக்கும் நெய்யில் வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக விடவும். இத்துடன் அரிசி மாவுக்கலவையைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி ஆறிய பால், முந்திரி சேர்த்துப் பரிமாறவும்.

The post புளியைப் பயன்படுத்துவது எப்படி? appeared first on Dinakaran.

Related Stories: