லக்னோவில் நீதிமன்ற வளாகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு; ஒருவர் உயிரிழப்பு: காவலர் படுகாயம்

லக்னோ: லக்னோவில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிசூடு நடத்தி சஞ்சீவ் ஜீவா என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞர் உடையில் வந்த கொலையாளிகள் துப்பாக்கிசூடு நடத்திவிட்டு தப்பியோடினர்.

லக்னோ நீதிமன்றத்தில் சஞ்சீவ் ஜீவா என்பவரை சில அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிசூடு நடைபெற்றபோது சஞ்சீவ் ஜீவா என்பவர் கொல்லப்பட்டதுடன், ஒரு இளம்பெண்ணும் காயமடைந்துள்ளார்.

பிரபல தாதா முக்தர் அன்சாரியின் உதவியாளராக இருந்த சஞ்சீவ் ஜீவா, பாஜக எம்எல்ஏ பிரமோத் திவோத் கொலை வழக்கில் முக்தர் அன்சாரியுடன் குற்றம்சாட்டப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்ற வழக்கு விசாரணைக்காக லக்னோ நீதிமன்றத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டிருந்தார். இத்தகைய சூழலில் அவர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது.

மேலும் இவர் மீது பல குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் போல் உடையணிந்து நீதிமன்றத்தில் வந்து சில நபர்கள் அவர் மீது துப்பாக்கிசூடு நடத்தினர். துப்பாக்கிசூடு நடத்திய பின்னர் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் காவலர் ஒருவர் காயப்பட்டதாகவும் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post லக்னோவில் நீதிமன்ற வளாகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு; ஒருவர் உயிரிழப்பு: காவலர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: