குருவை சாகுபடி முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அமைச்சர்கள் நாளை ஆலோசனை..!!

தஞ்சை: குருவை சாகுபடி முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அமைச்சர்கள், ஆட்சியர்கள் தஞ்சையில் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர். குருவை சாகுபடிக்காக தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவேரி டெல்டா மாவட்டங்களில் வருகின்ற 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் கல்லணையில் மதகுகளை புதுப்பிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை ஆய்வு செய்த நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் தஞ்சையில் இருந்து கடலூர் வரை ரூ.90 கோடி மதிப்பில் பாசன ஆறுகள் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் நடப்பாண்டு கடைமடை வரை தண்ணீர் விரைவாக சென்றடையும் என்றார். வரும் 8ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதாகவும் அதற்குள் கல்லணையில் மதகுகள் சீரமைக்கும் பணிகள் நிறைவடையும் என்றும் நீர்வளத்துறை பொறியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் குருவை சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், பயிர்க்கடன் வழங்குவது குறித்து நாளை ஆலோசனை நடைபெறுகிறது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, டி.ஆர்.பி ராஜா, அன்பில் மகேஸ், மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். கூட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்க உள்ளனர். டெல்டா மாவட்டங்களில் 9ம் தேதி முதலமைச்சர் ஆய்வு செய்ய உள்ள நிலையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது.

The post குருவை சாகுபடி முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அமைச்சர்கள் நாளை ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: