‘செல்பி’ எடுக்க முயன்ற போது 4வது மாடியில் இருந்து விழுந்து மாணவி பலி

நொய்டா: நொய்டாவில் நான்காவது மாடியில் இருந்து செல்பி எடுக்க முயன்ற போது, தவறி கீழே விழுந்து மாணவி உயிரிழந்தார். உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் குடும்பத்தினர், நொய்டாவின் செக்டார் 11 பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனர். நான்காவது மாடியில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியர் பாலக் என்பவரின் 15 வயது மகள், அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, நான்காவது மாடியில் நின்றிருந்த மாணவி, திடீரென அங்கிருந்து கீழே விழுந்து இறந்தார்.

தகவலறிந்த போலீசார், சிறுமியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து போலீஸ் ஏசிபி கங்கா பிரசாத் கூறுகையில், ‘நான்கு மாடி கட்டிடத்தின் முதல் இரண்டு தளங்களில் பாலக்கின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சம்பவம் நடந்த போது, இறந்த மாணவியின் தந்தை வேலைக்குச் சென்றிருந்தார். அவரது தாய் வீட்டு வேலைகளில் பிஸியாக இருந்தார். நான்காவது மாடியில் இருந்த மாணவி, தனது செல்போன் மூலம் செல்பி எடுத்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. செல்பி எடுக்க முயன்ற போது, மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்திருக்க வாய்ப்புள்ளது. வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

The post ‘செல்பி’ எடுக்க முயன்ற போது 4வது மாடியில் இருந்து விழுந்து மாணவி பலி appeared first on Dinakaran.

Related Stories: