அவதூறு செய்தி பரப்பியதாக கோவையில் பாஜ ஆதரவாளர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கடந்த 2021ம் ஆண்டு கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அப்போது அவிநாசியில் சாராயம் காய்ச்சியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான பத்திரிகை செய்தியை தவறாக சித்தரித்து சாராயம் காய்ச்சிய 5 திமுகவினர் கைது என மாற்றி கடந்த 5 தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் கோவை பாஜ ஆதரவாளர் சரவணபிரசாத் (52)என்பவர் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து பல்லடம் இளைஞரணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியம், திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கோவையில் தங்கியிருந்த பாஜ ஆதரவாளர் சரவணபிரசாத்தை போலீசார் கைது செய்தனர்.

The post அவதூறு செய்தி பரப்பியதாக கோவையில் பாஜ ஆதரவாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: