கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதி கேட்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முதல்வருக்கு கடிதம்

சென்னை : கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதி கேட்டு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது. இதுக்குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 51 டிராவல்ஸ் அலுவலகங்கள், 80 பஸ் பே, 151 நிறுத்தங்கள், 14 பயணிகள் காத்திருப்பு கூடம், 22 கடைகள் உள்ளன. இங்கு தென்தமிழகத்துக்கு பேருந்துகளை இயக்கும் 240 நிறுவனங்கள் உள்ளிட்ட 270 நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் வார நாட்களில் 850 பேருந்துகளும், வார இறுதி, விழாக் காலங்களில் 1,450 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் கிளாம்பாக்கத்திலோ 62 பஸ் பே, 130 நிறுத்தங்கள் மட்டுமே வழங்கப்படவுள்ளன. எனவே, திறக்கப்படவுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலோ, அதன் அருகிலோ ஆம்னி பேருந்துகளுக்கு குறைந்தளவு 500 நிறுத்தங்கள் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தர வேண்டும். அதன்பிறகு, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தை முற்றிலும் காலி செய்து கிளாம்பாக்கத்துக்கு மாற்றலாம் என கேட்டுக் கொள்கிறோம். என்று தெரிவித்துள்ளார்.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதி கேட்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முதல்வருக்கு கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: