ஆந்திர மாநிலம் அநாகப்பள்ளியை சேர்ந்தவர் அப்பலா நாயுடு. இவர் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை ஆந்திராவுக்கு கடத்தி வந்து அங்கிருந்து தமிழ்நாட்டில் சென்னை, ராமேஸ்வரம் போன்ற கடலோர பகுதிகளுக்கு கடத்தி அங்கிருந்து அவற்றை சிறிய படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று, ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சூளூர்பேட்டை நகரில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், ஒரு சரக்கு வாகனத்தை பிடித்து சோதனை செய்தனர். அந்த வாகனம் காலியாக இருந்துள்ளது. மேலும் அந்த சரக்கு வாகனத்தில் லோடு ஏற்றி செல்லும் பின்புறப்பகுதி சற்று கீழிறங்கி காணப்பட்டது. இதில் சந்தேகமடைந்த போலீசார் அந்த சரக்கு வாகனத்தை நுணுக்கமாக போலீசார் சோதனையிட்டனர்.
அந்த வாகனத்தில் ரகசிய அறைகள் அமைத்து அதில் கஞ்சா கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்திலிருந்து 250 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார், அதன் பின்னே வந்த காரில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் மற்றும் ஆந்திராவை சேர்ந்த 3 பேர் ஆகியோரை கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான அப்பலா நாயுடு தலைமறைவாகியுள்ளார்.
The post வாகனத்தில் ரகசிய அறை அமைத்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 250 கிலோ கஞ்சா பறிமுதல்: 8 பேர் கைது appeared first on Dinakaran.