ஜூலை 13, 14ம் தேதிகளில் திருச்சியில் தொழில் முனைவோர் கருத்தரங்கு

 

திருச்சி, ஜூன் 7: தொழில் வாய்ப்புகள் மற்றும் என்ன தொழில் துவங்கலாம் என்பது குறித்த தொழில் வழிகாட்டும் நிகழ்ச்சி மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வரும் ஜூலை 13, 14ம் தேதிகளில் நடைபெறுகிறது. தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் மற்றும் மகளிரியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழத்துடன் இணைந்து மகளிர் தொழில் முனைவோருக்கான மாநாடு மற்றும் தொழில் முனைவோர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்து இரு நாள் கருத்தரங்கு ஜூலை 13, 14ம் தேதிகளில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற உள்ளது.

தொழில் முனைவோராக விரும்பும் ஒவ்வொருவருக்கும் என்ன தொழில் தொடங்கலாம், அரசு உதவித் திட்டங்கள் என்னவெல்லாம் உள்ளன, தொழில் தொடங்க தயாராக தேவைப்படும் நிதி, வங்கி நிதி உதவி, மாவட்டம் தோறும் லாபகரமான தொழில்கள் என்னவெல்லாம் உள்ளன. மூலப்பொருட்கள் எங்கே குறைந்த விலையில் கிடைக்கும். வீட்டில் இருந்தபடியே செய்யும் தொழில்கள், சந்தை வாய்ப்புகள் உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் விதமாக நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கு ஆண்கள், பெண்கள், மாற்றுப்பாலினத்தவர், சுய உதவிக்குழு பெண்கள், மாணவிகள், ஆசிரியர்கள் என தொழில் தொடங்க ஆர்வமுள்ள அணைவரும் பங்கு பெறலாம்.

சுயஉதவிக்குழு பெண்கள், மகளிர் தொழில் முனைவோர்கள் மற்றும் உற்பத்தியாளர் தங்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்ய தொழில் முனைவோர் சங்க அலுவலகத்தின் 94887 85806, என்ற எண்ணிலோ, மாநில செயலாளர் மல்லிகா என்பவரை 99944 31117 என்ற செல்போன் எண்ணிலோ அல்லது மாவட்ட செயலாளர் பொன்செல்லி என்பவரை 94871 29523 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். அல்லது weat@assn@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை திருச்சி தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கத்தின் செயலாளர் மல்லிகா தெரிவித்துள்ளார்.

The post ஜூலை 13, 14ம் தேதிகளில் திருச்சியில் தொழில் முனைவோர் கருத்தரங்கு appeared first on Dinakaran.

Related Stories: