குரும்பலூர் மகா மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா

 

பெரம்பலூர், ஜூன் 7: பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் மகா மாரியம் மன் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற் றது. இதில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பெரம்பலூர் மாவட்டம், குரு ம்பலூர் கிராமத்தில் எழுந் து அருள் பாலித்து வரும் மகாமாரியம்மன் கோயில் தேர் திரு விழா கடந்த மாதம் 26 ம் தேதி வெள்ளிக்கிழமை பூச் சொரிதலுடன் தொடங்கி யது. 30ம் தேதி இரவு மகாமாரியம்மனுக்கு காப்பு கட் டுதல் நடைபெற்றது. ஜூன் மாதம் 2ம் தேதி சுவாமி திரு வீதி உலா யானை வாகனத்தில் நடைபெற்றது.

3ம் தேதி சிம்ம வாகனத் தில் திருவீதி உலா நடை பெற்றது. ஆலடியான் மற்றும் ஆப்புரான் சுவாமிகளுக்கு பொங்கல் மாவிளக்கு நடைபெற்றது. 4ம் தேதி ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற் றது. அன்று அலகு குத்துதல், அக்னி செட்டி எடுத்தல், மாவிளக்கு பூஜை நடைபெ ற்றது. 5ம் தேதி திங்கட் கிழமை குதிரை வாகனத் தில் சுவாமி திருவீதி உலா, அக்கினி மிதித்தல், பொங் கல் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து விழா வின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.காலை 11 மணியளவில் சிவன் கோயில் அருகில் இருந்து மகா மாரியம்மன் தேர் பொதுமக்களால் வடம் பிடித்து இழுத்து சொல்லப் பட்டது.

குரும்பலூரில் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் மீண்டும் சிவன் கோயில் அருகே நிலைக்கு வந் தடைந்தது. இந்த தேரோட்ட த்தில் குரும்பலூர் கிராம மக்கள் மட்டுமன்றி பாளையம், ஈச்சம்பட்டி, புதூர், மேட் டாங்காடு, திருப்பெயர்,லாட புரம், அம்மாபாளையம், கள ரம்பட்டி, நக்கசேலம், பெரம் பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆரவாரத்துடன் தேரை இழுத்து சென்றனர். இன்று (7ம்தேதி) மஞ்சள் நீர் ஆடுதல், விடையாற்றிஉற்சவம் ஆகி யவற்றுடன் விழா நிறைவ டைகிறது.

The post குரும்பலூர் மகா மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா appeared first on Dinakaran.

Related Stories: