பெரம்பலூர் மாவட்டத்தில் 2வது அனைத்து மகளிர் காவல் நிலையம் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காணொளியில் திறந்து வைத்தார்

 

பெரம்பலூர், ஜூன்.7: பெரம்பலூர் மாவட்டத்தில் 2வது அனைத்து மகளிர் காவல் நிலையத்தை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு காணொ ளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்டஎஸ்பி அலுவலகக் கட்டுப்பாட்டில் பெரம்பலூர் காவல் நிலையம், மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, மாவட்ட குற்றப்பிரி வு, பெண்கள் மற்றும் குழந் தைததளுக்கு எதிரான குற் றங்கள் தடுப்புப் பிரிவு, சை பர் கிரைம் காவல் நிலைய ங்கள் மற்றும் பாடாலூர், குன்னம், மங்களமேடு, அரும்பாவூர் பகுதிகளில் இன்ஸ்பெக்டர்கள் தலை மையில் காவல் நிலையங் களும், மருவத்தூர், வி.கள த்தூர், கை.களத்தூர் ஆகிய பகுதிகளில் சப்.இன்ஸ்பெக்டர்களைக் கொண்ட காவல் நிலையங்களும் இயங் கி வருகின்றன.

பெரம்ப லூர் உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் பெரம்பலூரில் கனரா வங் கி எதிர்புறம் இயங்கி வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் பரிந்துரையின் பேரில், மங் களமேடு உட்கோட்டத்தில் உள்ள மங்களமேடு பகுதி யில், புதிதாக ஒரு அனை த்து மகளிர் காவல் நிலை யம் இயங்கிட தமிழக காவல்துறை அனுமதிஅளித்து, அதன்படி பெரம்பலூர் மாவ ட்டத்தின் 2வது அனைத்து மகளிர் காவல் நிலையத் திறப்புவிழா நேற்று (6ம்தே தி) காலை 11 மணிக்கு கா ணொளிக் காட்சியின் மூல ம் நடைபெற்றது.

இதைமுன்னிட்டு, தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இய க்குநர் (சட்டம் மற்றும் ஒழங்கு) சங்கர் முன்னிலையி ல், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சென்னையில் இருந்தபடி, மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தைக் காணொளி க்காட்சி மூலம் திறந்து வை த்தார். தொடர்ந்து தற்காலிகமாக மங்களம டு காவல் நிலையத்தின் ஒரு பகுதியாகப் பிரித்து அமைக்கப்பட்டுள்ள, மங்க ளமேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பெர ம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி குத்துவிளக் கு ஏற்றி, பெயர் பலகையை த்திறந்து வைத்து, இனிப்பு களை வழங்கினார்.

இதில் பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பிக்கள் (தலைமையிடம்) மதியழ கன், (மதுவிலக்கு அமலாக் கப் பிரிவு) வேலுமணி, டிஎஸ்பிக்கள் (மங்களமேடு உட்கோட்டம்) சீராளன், (பெர ம்பலூர் உட்கோட்டம்) பழனி ச்சாமி, இன்ஸ்பெக்டர்கள் (தனிப்பிரிவு) வெங்கடேஸ் வரன், (மங்களமேடு) நடரா ஜன், (மங்களமேடு அனை த்து மகளிர் காவல் நிலை யம்-பொ) விஜயலட்சுமி, எஸ்எஸ்ஐ பூங்கொடி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவண க்குமார், மதியழகன் மற்றும் ஏட்டுகள், போலீசார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் 2வது அனைத்து மகளிர் காவல் நிலையம் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காணொளியில் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: