ஈரோடு, ஜூன் 7: ஈரோடு காசிபாளையம் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் சதர்ன் ரயில்வே மின்பாதையில் ஊராட்சி கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய்கள் அமைக்கும் பணிகளை ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது. இதையடுத்து இன்று (7ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மரப்பாலம், முனிசிபல் சத்திரம், அக்ரஹார வீதி, கச்சேரி வீதி, பெரியார் வீதி, காரைவாய்க்கால், வளைக்கார வீதி, மண்டபம் வீதி, விவிசிஆர் நகர், வெங்கிடுசாமி வீதி, பாலசுப்பராயலு வீதி, காந்திஜி ரோடு, ஜீவானந்தம் ரோடு மற்றும் கள்ளுக்கடை மேடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று (7ம் தேதி) மின்விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post ஈரோட்டில் இன்று மின் தடை appeared first on Dinakaran.