மாவட்டத்தில் 12 போலீசார் திடீர் பணியிட மாற்றம் எஸ்பி உத்தரவு

 

ஈரோடு, ஜூன் 7: ஈரோடு மாவட்டத்தில் எஸ்எஸ்ஐக்கள், ஏட்டுகள், கிரேடு 1 போலீசார் 12 பேரை நிர்வாக காரணங்களுக்காக திடீரென பணியிட மாற்றம் செய்து எஸ்பி ஜவகர் உத்தரவிட்டார். இதன்படி ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீஸ்களான கிரேடு 1 ஜெயசங்கர மூர்த்தி, மூர்த்தி, கருங்கல்பாளையம் கிரேடு 1 பாலமுருகன், எஸ்எஸ்ஐக்கள் சித்தோடு கோபால், பவானி ரமேஷ், அம்மாபேட்டை முருகன், பவானிசாகர் முத்துமாணிக்கம், ஈரோடு டவுன் மதுவிலக்கில் ராஜேந்திரன், செந்தில்,

ஆசனுார் மதுவிலக்கு சாதிக் பாட்சா, ஏட்டுகள் கடத்தூர் தினேஷ் குமார், கடம்பூர் அசோக் ஆகிய 12 பேரும் தாளவாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட காவல்துறையில் 12 பேரை திடீரென பணியிட மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளது, போலீசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மாவட்டத்தில் 12 போலீசார் திடீர் பணியிட மாற்றம் எஸ்பி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: