போப் பிரான்சிஸ்க்கு மருத்துவ பரிசோதனை

ரோம்: போப் பிரான்சிஸ்(86) மார்ச் மாதம் நுரையீரல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. 3 நாட்களுக்கு பின் அவர் வீடு திரும்பினார். அவர் இளைஞராக இருந்தபோது சுவாச தொற்று நோய் காரணமாக அவரது நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு பின் நேற்று அவர் மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார். ஜெமெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு நேற்று காலை போப் திடீரென சென்றார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழு மூலமாக வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

The post போப் பிரான்சிஸ்க்கு மருத்துவ பரிசோதனை appeared first on Dinakaran.

Related Stories: