குருவாயூர் எக்ஸ்பிரஸ் கொடைக்கானல் ரோட்டில் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

நெல்லை: குருவாயூர் எக்ஸ்பிரஸ் வரும் 15ம்தேதி முதல் இரு மார்க்கத்திலும் கொடைக்கானல் ரோட்டில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து திருவனந்தபுரம், நெல்லை வழியாக சென்னைக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை எக்மோர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் (எண்கள் 16127/ 16128) இரு மார்க்கத்திலும் வரும் 15ம்தேதி முதல் கொடைக்கானல் ரோட்டில் நின்று செல்கிறது. அன்றைய தேதியில் இருந்து 6 மாத காலத்திற்கு பரீட்சார்த்த அடிப்படையில் இந்நிறுத்தம் வழங்கப்படுகிறது.

இதன்படி சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் பிற்பகல் 3.20 மணிக்கு திண்டுக்கல் வருகிறது. அங்கிருந்து 3.37 மணிக்கு கொடைக்கானல் ரோட்டில் ஒருநிமிடம் நின்று செல்லும். மறுமார்க்கத்தில் குருவாயூர் – சென்னை எக்ஸ்பிரஸ் மதுரைக்கு பகல் 12.30 மணிக்கு போய் சேருகிறது. அங்கிருந்து புறப்பட்டு கொடைக்கானல் ரோட்டிற்கு பிற்பகல் 1.08 மணிக்கு போய் சேருகிறது. அங்கு ஒருநிமிடம் நின்று செல்கிறது. இதுபோல் மதுரை- கச்சுகுடா வாராந்திர ரயிலும் கொடைக்கானல் ரோட்டில் வரும் 17ம் தேதி முதல் நின்று செல்கிறது.

The post குருவாயூர் எக்ஸ்பிரஸ் கொடைக்கானல் ரோட்டில் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: