தடை செய்யப்பட்ட லாட்டரிகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரிகள் ஒழிக்கும் பொருட்டு 1 நாள் சிறப்பு சோதனை மேற்கொண்டு 8 வழக்குகள் பதிவு செய்து 12 நபர்கள் கைது

சென்னை: தடை செய்யப்பட்ட லாட்டரிகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரிகள் ஒழிக்கும் பொருட்டு 1 நாள் சிறப்பு சோதனை மேற்கொண்டு 8 வழக்குகள் பதிவு செய்து 12 நபர்கள் கைது செய்யப்பட்டு, 10 டிக்கெட்டுகள், 4 செல்போன்கள், ரொக்கம் ரூ.15,750, 6 பில் புத்தகங்கள், மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் 144 இடங்களில் போதை எதிர்ப்பு மற்றும் “காவல் உதவி” செயலியின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை சென்னையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப, அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், உதவி ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், சட்ட விரோதமாக லாட்டரிகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், நேற்று (05.06.2023) காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் சென்னை பெருநகர் முழுவதும் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில், நேற்று (05.06.2023) நடைபெற்ற சிறப்பு சோதனையின் காரணமாக, தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்து 12 நபர்கள் கைது செய்யப்பட்டு, 10 டிக்கெட்டுகள், 4 செல்போன்கள், ரொக்கம் ரூ.15,750, 6 பில் புத்தகங்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் நேற்று (05.06.2023) காவல் உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர்கள் சென்னை பெருநகரில் 2 பள்ளிகள், 2 கல்லூரிகள், 140 பொது இடங்கள் என மொத்தம் 144 இடங்களில் போதைப் பொருள் எதிர்ப்பும், அதன் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது. இம்முகாம்களில் 2,936 நபர்கள் கலந்து கொண்டு, காவல்துறையின் போதை ஒழிப்பு குறித்த அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை கேட்டறிந்தும், தங்களது சந்தேகங்களை கேட்டும் தெளிவடைந்தனர். சென்னை பெருநகரில், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டகள் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

The post தடை செய்யப்பட்ட லாட்டரிகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரிகள் ஒழிக்கும் பொருட்டு 1 நாள் சிறப்பு சோதனை மேற்கொண்டு 8 வழக்குகள் பதிவு செய்து 12 நபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: