ஆதிபுருஷ் பட வெளியீட்டுக்கு முன் பிரபாஸ் சிறப்பு வழிபாடு: திருமலையில் குவிந்த ரசிகர்கள் செல்ஃபி எடுக்க ஆர்வம்

திருப்பதி: ஆதிபுருஷ் படத்தின் ப்ரீ ரீலீஸ் நிகழ்வுக்கு முன்பு அப்படத்தின் ஹீரோ பிரபாஸ் திருமலையில் உள்ள ஏழுமலையானை வழிபட்டார். பாகுபலி படம் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்தவர் பிரபாஸ். பாகுபலி படத்துக்கு பின்னர் இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து தோல்வியை தழுவின. குறிப்பாக பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ராதே ஷியாம் திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்தது.

இதனால் கண்டிப்பாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் பிரபாஸ். இந்த நிலையில் ஆதிபுருஷ் படத்தின் ப்ரீ ரீலீஸ் நிகழ்வுக்கு முன்பு அப்படத்தின் ஹீரோ பிரபாஸ் திருமலையில் உள்ள ஏழுமலையானை வழிபட்டார். இன்று காலை திருமலை வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். தரிசனத்திற்கு பிறகு தேவஸ்தானம் சார்பில் அவருக்கு பட்டு வஸ்திரம் சாமி தீர்த்த பிரசாதம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. திருமலையில் நடிகர் பிரபாஸ் இருக்கும் தகவல் தெரிந்து அவரது ஏராளமான ரசிகர்கள் திருமலையில் குவிந்தனர்.

The post ஆதிபுருஷ் பட வெளியீட்டுக்கு முன் பிரபாஸ் சிறப்பு வழிபாடு: திருமலையில் குவிந்த ரசிகர்கள் செல்ஃபி எடுக்க ஆர்வம் appeared first on Dinakaran.

Related Stories: