மடிப்பாக்கம், தரமணி மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகளை வைத்திருந்த 1 பெண் மற்றும் 1 சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட மொத்தம் 6 நபர்கள் கைது

சென்னை: மடிப்பாக்கம், தரமணி மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகளை வைத்திருந்த 1 பெண் மற்றும் 1 சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட மொத்தம் 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். 2.8 கிலோ கஞ்சா, 58 உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (05.06.2023) காலை, மடிப்பாக்கம், மூவரசன்பேட்டை, ஏரிக்கரை அருகே கண்காணிப்பு பணியில் இருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களை நிறுத்தி விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். மேலும் அவர்களை சோதனை செய்தபோது, விற்பனைக்காக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 1.அருண் (எ) மாடு அருண், வ/23, த/பெ.அசோக், சிவசக்தி நகர், பழைய பல்லாவரம், சென்னை, 2.சஞ்சய்பாரத் (எ) ஊளை, வ/24, த/பெ.ராஜாசிங், யூனியன் கார்பைட் காலனி, பழைய பல்லாவரம், சென்னை, 3.ராஜேஷ்குமார், வ/28, த/பெ.ஆறுமுகம், ராஜா தெரு, பழைய பல்லாவரம், சென்னை ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் எடை கொண்ட கஞ்சா மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் எதிரி அருண் (எ) மாடு அருண் மீது, ஏற்கனவே 1 கொலை வழக்கு, கஞ்சா வழக்கு உட்பட 3 குற்ற வழக்குகள் உள்ளதும், இவர் S-9 பழவந்தாங்கல் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. மேலும், J-13 தரமணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (05.06.2023) காலை, தரமணி, 100 அடி சாலையில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வயதான பெண் மற்றும் ஒரு இளைஞரிடம் விசாரணை செய்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, விற்பனைக்காக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 1.சுரேஷ், வ/23, த/பெ.சங்கர், ராஜாஜி தெரு, M.G நகர், தரமணி, சென்னை மற்றும் அவரது பாட்டி 2.சாந்தா, வ/63, க/பெ.பாலகிருஷ்ணன், ராஜாஜி தெரு, M.G நகர், தரமணி, சென்னை ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 300 கிராம் எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிரி சுரேஷ் மீது, ஏற்கனவே 2 அடிதடி வழக்குகளும், சாந்தா என்பவர் மீது 5 கஞ்சா வழக்குகளும் உள்ளது தெரியவந்தது.

மேலும், P-3 வியாசர்பாடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (05.06.2023) காலை, வியாசர்பாடி, S.M நகர் மெயின் ரோடு, அசோக் பில்லர் சந்திப்பு அருகே கண்காணிப்பு பணியில் இருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை விசாரணை செய்து, சோதனை செய்த போது, போதைக்காக உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், போதைக்காக Nitrovet உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்ய வைத்திருந்த 1.மேதாஜி, வ/25, த/பெ.கிருஷ்ணமூர்த்தி, S.M நகர், வியாசர்பாடி, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 58 Nitravet tablet உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி 3 வழக்குகளில் 1 பெண், 1 சரித்திரபதிவேடு குற்றவாளி உட்பட மொத்தம் 6 நபர்கள் கைது செய்யப்பட்டு, 2 கிலோ 800 கிராம் கஞ்சா மற்றும் 58 உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் 6 நபர்களும் நேற்று (05.06.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post மடிப்பாக்கம், தரமணி மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகளை வைத்திருந்த 1 பெண் மற்றும் 1 சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட மொத்தம் 6 நபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: