கடவூர் மற்றும் தோகைமலை பகுதிகளில் எள் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்

தோகைமலை : கடவூர் மற்றும் தோகைமலை பகுதிகளில் எள்ளு சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர்கரூர; மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் எள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர் இதனால் எள் சாகுபடியில் அதிக மகசூல் பெற்று லாபம் பெறுவது குறித்து முன்னோடி விவசாயிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர் கடவூர் மற்றும் தோகைமலை பகுதிகளில் எள்ளு சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர் கோடை காலம் உள்பட அனைத்து பருவங்களிலும் விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரும் எள் சாகுபடியானது விவசாயிகளுக்கு பயன் அளித்து வருகிறது.

கோடை மழை மற்றும் கிணற்று பாசன முறைகளில் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிகமான லாபத்தை ஈட்டக்கூடிய எள் சாகுபடியில் முன்னோடி விவசாயிகளின் அனுபவங்களை எடுத்து கூறி உள்ளனர்.எள் சாகுபடியில் ரகங்கள்: எள் சாகுபடியில் கோடை எள் சாகுபடியை பொருத்தவரை கோ 1, டி.எம்.வி 3, டி.எம்.வி 4, டி.எம்.வி 5, டி.எம்.வி 6, எஸ்.வி.பி.ஆர; 1, வி.ஆர்ஐ (எஸ்.வி) 1, டி.எம்.வி 7, ஆகிய ரகங்களை எள் சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் கிணற்று பாசனத்திற்கும் மேற்படி ரகங்களையே விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்எள் சாகுபடிக்கு ஏற்ற பருவம்: என் சாகுபடியை பொறுத்தவரை மானாவாரியாக பயிரிட ஆடி மாதம், கார;த்திகை மாதங்கள் மிகச் சிறந்தவையாக இருக்கும். இதேபோல் கிணற்று பாசனத்தில் எள் சாகுபடியை தொடங்க மாசி மாதங்கள் ஏற்றதாக இருக்கும்.

எள் சாகுபடிக்கு ஏற்ற நிலம் தயாரிப்பு: எள் சாகுபடி செய்வதற்கு மணல் பாங்கான வண்டல் மண், செம்மண், களிமண் போன்ற வயல்கள் ஏற்றதாக இருக்கும். இதில் மண்ணின் சராசரியான கார அமிலத்தன்மை 6 முதல் 8 வரை இருந்தால் நல்ல மகசூலுக்கு சிறந்ததாக இருக்கும். எள் சாகுபடியை பொறுத்தவரை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக உழவு செய்ய வேண்டும்.
விதைத்தல்: எள் சாகுபடியில் 20 கிலோ மணல் அல்லது 20 கிலோ எருவுடன் எள் விதையைக் கலந்து விதைப்பது மிகச் சிறந்தது. இதுபோன்று விதைப்பதால் சரியான இடைவெளியில் விதைகள் விழுந்து நன்றாக பயிர; முளைக்கிறது. வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளியும், செடிக்கு செடி 30 செ.மீ இடைவெளியும் கொடுக்க வேண்டும்.

களை நிர;வாகம்: எள் சாகுபடியை பொறுத்தவரை நடவு செய்த 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்குள் முதல் களை எடுக்க வேண்டும். அதனை தொடர;ந்து முதல் களை எடுத்த 15 வது நாட்களுக்கு பிறகு அடுத்த களை எடுக்க வேண்டும். மேற்படி முறைகளில் எள் சாகுபடியை விவசாயிகள் கடைபிடித்து வந்தால் எள் சாகுபடியில் குறைந்த செலவில் அதிக மகசு+ல் பெற்று லாபம் பெறலாம் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவித்து உள்ளனர் தற்பொழுது கடவு+ர; மற்றும் தோகைமலை பகுதிகளில் எள் சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post கடவூர் மற்றும் தோகைமலை பகுதிகளில் எள் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: