ஆபாச படங்கள், வீடியோக்கள் அனுப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை திருச்சி கலெக்டரிடம் சென்னை பேராசிரியை பகீர் புகார்

திருச்சி, ஜூன் 6: போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை அளித்து வருவதாக திருச்சி கலெக்டரிடம் சென்னை பேராசிரியை அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கலெக்டர் பிரதீப்குமாரிடம் நேற்று 27 வயது இளம் பெண் ஒருவர் அளித்த மனு: சென்னையை சேர்ந்த நான், திருச்சியில் தங்கி படித்து கொண்டே தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுவதுடன் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவு தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். திருவண்ணாமலையை சேர்ந்த உறவினர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கடந்த மார்ச் 24ம் தேதி போலீசில் புகார் செய்ேதன். அப்போது விசாரணைக்கு தேவைப்படுவதாக அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் எனது செல்போன் எண்ணை வாங்கினார். பின்னர் எப்ஐஆரில் இருந்த தவறான விவரங்களை திருத்த கமிஷனர் அலுவலகம் சென்றேன். அப்போது அங்கிருந்த ஒரு இன்ஸ்பெக்டர், எனக்கு உதவுவதுபோல் பேச துவங்கினார்.
இதையடுத்து ஏப்ரல் 25ம் தேதி முதல் தொடர்ந்து எனக்கு வாட்ஸ் அப் வீடியோ கால் செய்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்க தொடங்கினார். இதற்கு அந்த போலீஸ் நிலைய பெண் எழுத்தரும் உடந்தை. தொடர்ந்து எனது செல்போனுக்கு ஆபாச படங்கள், வீடியோக்களை அனுப்பி தொந்தரவு செய்தார். மேலும் ஸ்டேஷனுக்கு வருமாறு அடிக்கடி அழைத்து தொல்லை கொடுத்தனர். இதுபற்றி ஏப்ரல் 24ம் தேதி உதவி கமிஷனரிடம் ஆதாரத்துடன் புகார் செய்ய சென்றேன். அப்போது இன்ஸ்பெக்டர் என்னை அறைக்கு அழைத்து சென்று சித்ரவதை செய்தார். எனவே இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இச்சம்பவம் திருச்சி போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஆபாச படங்கள், வீடியோக்கள் அனுப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை திருச்சி கலெக்டரிடம் சென்னை பேராசிரியை பகீர் புகார் appeared first on Dinakaran.

Related Stories: