திருச்சி, ஜூன் 6: சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தின் ஒரு பகுதியாக திருச்சி பெல் வளாகத்தில் மரம் நடும் இயக்கம் நேற்று துவங்கியது. சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி பெல் வளாகத்தில் நடந்த மாபெரும் மரம் நடும் இயக்கத்தை, திருச்சி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சிவரஞ்சனி துவக்கி வைத்து பேசுகையில், இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருளான ‘நெகிழி மாசுபாட்டை முறியடி’ என்பது நெகிழி மாசுபாட்டால் ஏற்படும் தீமைகளை நினைவூட்டும் வகையில் இருப்பதாகவும், அதற்கு எதிராக போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் உள்ளது என்றார். நிகழ்ச்சியில் உயர் அழுத்த கொதிகலன் ஆலையின் பிரிவு 2ஐ ஒட்டி மொத்தம் 400 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
உதவி வனப் பாதுகாவலர் சரவண குமார், இணைப்பில்லா எஃகு குழாய் ஆலை பராமரிப்பு மற்றும் சேவைகள் பிரிவின் கமலக்கண்ணன், வால்வுகள் மற்றும் டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் குழுவின் மனிதவளப்பிரிவு பொது மேலாளர் கணேஷ், மருத்துவம் மற்றும் பற்றிணைப்பு ஆராய்ச்சிக் கழகத்தின் டாக்டர் துரைராஜ், பொறியியல், சிவில் மற்றும் ஆய்வகங்கள் பிரிவு கூடுதல் பொது மேலாளர் ரவிச்சந்திரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் இதர உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பெல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பிரிவின் பொது மேலாளர் கங்காதர ராவ் வரவேற்றார்.
The post உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பெல் வளாகத்தில் மரம் நடும் இயக்கம் துவக்கம் appeared first on Dinakaran.