தொட்டியம் வட்டத்தில் வருவாய் தீர்வாயம் நாளை துவக்கம்

தொட்டியம், ஜூன் 6: தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் நாளை துவங்குகிறது. திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டத்தில் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமையில் நாளை (7ம் தேதி) முதல் நடைபெற உள்ளது. நாளை (7ம் தேதி) புதன்கிழமை ஏலூர்பட்டி குறுவட்ட பகுதிகளான வாள்வேல்புத்தூர், எம்.களத்தூர், நாகையநல்லூர், நத்தம், ஏலூர்பட்டி, காமலாபுரம், தோளூர்பட்டி எம்.புத்தூர் ஆகிய கிராமங்களுக்கும், 8ம் தேதி (வியாழக்கிழமை) காட்டுப்புத்தூர் குறுவட்ட பகுதிகளான முருங்கை, கிடாரம், பிடாரமங்கலம், உன்னியூர், பெரிய பள்ளிபாளையம், சின்னபள்ளிபாளையம், ராம சமுத்திரம், காட்டுப்புத்தூர் (மேற்கு), காட்டுப்புத்தூர் (கிழக்கு) ,சீலைப் பிள்ளையார் புதூர், காடுவெட்டி ஆகிய கிராமங்களுக்கும், 9ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொட்டியம் குறுவட்ட பகுதிகளான அரசலூர், தொட்டியம், அரங்கூர், அப்பன நல்லூர், கொளக்குடி, சித்தூர், சீனிவாச நல்லூர், அலகரை, மணமேடு, முள்ளிப்பாடி ஆகிய கிராமங்களுக்கும் நடைபெற உள்ளது.

இம்முகாமில் கிராம வரவு செலவு கணக்குகள் சரிபார்க்கப்படும். பொதுமக்கள் தங்கள் நிலப் பிரச்சனைகளான பட்டா, சிட்டா, பாதை பிரச்சனை உள்ளிட்டவைகளுக்கு மனு செய்து பயன் பெறலாம். மேலும் 9ம்தேதி மதியம் 3 மணிக்கு குடிகள் மாநாடு நடைபெற உள்ளது. அப்போது தொட்டியம் வட்டத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் மனு அளித்து பயன்பெறலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு என கலெக்டர் பிரதீப்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post தொட்டியம் வட்டத்தில் வருவாய் தீர்வாயம் நாளை துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: