பெரம்பலூரை பசுமை போர்வை போர்த்திய மாவட்டமாக்க வேண்டும் : மக்கள் ஒத்துழைப்பு அளிக்க கலெக்டர் வேண்டுகோள்

பெரம்பலூர், ஜூன் 6: பெரம்பலூர் மாவட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் மரக்கன் றுகளை நட்டு வளர்க்க முன் வரவேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தை பசுமை போர்வை போர்த்தப்பட்ட மாவட்ட மாக உருவாக்க ஒத்துழைப்பு தாருங்கள் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கை 9சதவீதம் மட்டுமே உள்ளது. இந்த எண்ணிக்கையினை பெருக்குவதற்கு அரசின் சார்பில் பல்வேறு இடங்க ளில் மரக்கன்றுகள் நடுவ தற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்க த்தின் மூலம் மரக்கன்றுக ளைநடுவதற்கு பள்ளிவளா கங்கள், அரசு அலுவலக வளாகங்கள், புறம்போக்கு நிலங்கள் என மொத்தம் 130 ஹெக்டர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மழைக்காலத்திற்குள் 130 ஹெக்டரிலும் மரக்கன்றுகளை நடுவதற்கு துரித நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் மட்டுமே இது போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றில்லாமல், பொதுமக்களும் தன்னார்வலர்களும் மரக் கன்றுகளை நட்டு வளர்ப்பதற்கு தங்களின் முழு பங்களிப்பை அளிக்க வேண் டும். பெரம்பலூர் மாவட் டத்தில் 9 சதவீதம் மட்டுமே உள்ள மரங்களின் எண்ணி க்கையினை அதிகப்படுத் தி பசுமைப் போர்வை போ ர்த்தப்பட்ட மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தை உரு வாக்க பொதுமக்களும் தங் களின் முழு பங்களிப்பை வழங்கவேண்டும். ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மரக்கன்றையாவது நட்டு வளர்க்க உறுதி எடுக் க வேண்டும். மரங்கள் வள ர்ப்பதால் சுற்றுச்சூழல் மேம்பாடு அடையும், மழைப் பொழிவு தொடர்ந்து இருக்கும், நாம் சுவாசிக்க தூய் மையான ஆக்சிஜன் காற்று கிடைக்கும், புவி வெப்ப மயமாதல் தவிர்க்கப்படும். நாம் நம்முடைய அடுத்தத் தலைமுறையினருக்கு செய்யும் மிகமுக்கியமான நன் மையாக மரம் வளர்ப்பு இருக்கும் என்பதை அனைவரும் மனதில் வைத்து அதிக அளவிலான மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பொதுமக் கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித் தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 262 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் லலிதா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சரவணன், துணை ஆட்சியர் (பயிற்சி) பிரியதர்ஷினி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் பிரேம்குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூரை பசுமை போர்வை போர்த்திய மாவட்டமாக்க வேண்டும் : மக்கள் ஒத்துழைப்பு அளிக்க கலெக்டர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: