சென்னையில் அதிமுக பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி ஆக்கிரமித்து இருந்த அரசுக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு..!!

சென்னை: சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அதிமுக பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி ஆக்கிரமித்து இருந்த அரசுக்கு சொந்தமான ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு நிலத்தை வருவாய் துறையினர் மீட்டுள்ளனர். சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டி அரசுக்கு சொந்தமான இடத்தில் அதிமுக பிரமுகரான தோட்டக்கலை வி.கிருஷ்னமூர்த்தி தோட்டக்கலை சங்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி பயன்படுத்தி வந்தார். இதில் அரசு கையகப்படுத்த வேண்டும் என்றே எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் முரசொலியில் தொடர்ந்து எழுதி வந்தார்.

இதனையடுத்து ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கடந்த 1989-ல் நிலத்தை மீட்க திமுக அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என உறுதி செய்தது. இதை தொடர்ந்து அங்கு அமைந்திருந்த ட்ரைவின் உணவு விடுதியை ஆக்கிரமித்த 20 ஏக்கர் நிலத்தை கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அரசு கையகப்படுத்தி செம்மொழி பூங்கா அமைத்தது. அந்த நிலத்திற்கு எதிரே ரூ.1000 கோடி மதிப்புள்ள 6.3ஏக்கர் நிலத்தில் இருந்து தோட்டக்கலை சங்கத்தை காலி செய்யவும் அரசு நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கில் ஆட்சியர் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அந்த நிலம் சங்கத்திற்கே சொந்தமானது என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். ஆட்சியரின் உத்தரவை நிறுத்து வைத்த நில நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் உத்தரவை என அமல்படுத்த கூடாது என தோட்டக்கலை சங்கத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்த நோட்டீசை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அரசு நிலத்திற்கு உரிமை கோரிய தோட்டக்கலை சங்கத்தின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை கடந்த மார்ச் 6-ம் தேதி அப்போதைய உயர்நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பாரத சக்கரவர்த்தி அமர்வும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து அந்த இடத்திற்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் அதிமுக பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி ஆக்கிரமித்து இருந்த அரசுக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: