அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் டிரம்ப்பை எதிர்த்து போட்டி!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2024ல் நடைபெற உள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை இரு கட்சி ஆட்சி முறையை கொண்ட நாடு ஆகும். அங்கு ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரு கட்சிகள் மட்டுமே போட்டியிடும். தற்போது அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிபராக ஜோ பைடன் உள்ளார்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில் இவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிட உள்ளார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் டிரம்ப் அதிபராக இருந்த போது துணை அதிபராக இருந்தார். கடந்த முறை நடந்த துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை எதிர்த்து போட்டியிட்டார். முன்னதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேவும் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் டிரம்ப்பை எதிர்த்து போட்டி! appeared first on Dinakaran.

Related Stories: