இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை:
மூர்மார்க்கெட் – ஆவடி இடையே காலை 12.15 மணிக்கும், சென்னை கடற்கரை – அரக்கோணம் இடையே 1.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் 7, 8, 9 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மேலும் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் – ஆவடி இடையே 11.55 மணிக்கும், மூர்மார்க்கெட்-ஆவடி இடையே 11.30, 11.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் வரும் 8ம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோன்று, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் – மூர்மார்க்கெட் இடையே 9.50க்கு இயக்கப்படும் ரயில் ஆவடி -மூர்மார்க்கெட் இடையே 6ம் தேதி முதல் 8ம் தேதி வரையும், அரக்கோணம் முதல் வேளச்சேரி இடையே காலை 4 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் அரக்கோணம் – சென்னை கடற்கரை இடையே 7ம் தேதி முதல் 9ம் தேதி வரையும், வேளச்சேரி முதல் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் சென்னை கடற்கரை – பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையேயும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் – வேளச்சேரி இடையே 8.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆவடி – சென்னை கடற்கரை இடையே 9ம் தேதியும், பட்டாபிராம் மிலிட்டர் சைடிங் – மூர்மார்க்கெட் இடையே 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆவடி – மூர்மார்க்கெட் இடையே 8ம் ேததி ரத்து செய்யப்படுகிறது.
The post சென்னை-அரக்கோணம் இடையே மின்சார ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.