பொன்னேரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலர் பலி

பொன்னேரி: பொன்னேரி அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலர் ஒருவர் பலியானார். பொன்னேரி அடுத்த திருஆயர்பாடி ராமசாமி ரெட்டி தெருவை சேர்ந்தவர் கமலதாசன்(44). திருமணம் ஆகாதவர். கடந்த 2005ம் ஆண்டு தமிழக காவல்துறையில் சேர்ந்த இவர், சென்னை மாநகர மேற்கு மண்டல காவல் கட்டுப்பாட்டு அறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பைக்கில், பொன்னேரியில் இருந்து கூடுவாஞ்சேரி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம், இவரது பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயமடைந்து மயங்கி சரிந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கமலதாசனை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து, பொன்னேரி போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

The post பொன்னேரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலர் பலி appeared first on Dinakaran.

Related Stories: