லெஸ்பியன் உறவால் 2வது முறையாக 3 குழந்தைகளின் தாயுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்: கடிதத்துடன் தாலியை வைத்து கணவனுக்கு அதிர்ச்சி

சேலம்: சேலத்தில் 3 குழந்தைகளின் தாயுடன் லெஸ்பியன் உறவு கொண்டிருந்த 25 வயது இளம்பெண், கணவனுக்கு கடிதம் எழுதி தாலியையும் கழற்றி வைத்துவிட்டு 2வது முறையாக ஓட்டம் பிடித்தார். சேலம் கொண்டலாம்பட்டி அரசமரத்துகாட்டூரை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கு, கடந்த 5 ஆண்டுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த வெள்ளித்தொழிலாளியுடன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இதனால், பக்கத்து வீட்டில் வசித்த 3 குழந்தைகளின் தாயுடன் அந்த இளம்பெண் நெருங்கிப் பழகினார். நாளடைவில் அவர்களுக்குள் லெஸ்பியன் உறவு (ஓரினச்சேர்க்கை) ஏற்பட்டுள்ளது. இதை அரசல்புரசலாக அறிந்த 3 குழந்தைகளின் தந்தை, இனிமேல் இங்கிருந்தால் பிரச்னை பெரிதாகிவிடும் எனக்கருதி வீட்டை காலி செய்துவிட்டு தம்மநாயக்கன்பட்டிக்கு குடிபெயர்ந்தார்.

கடந்த ஓராண்டாக அங்கு வசிக்கின்றனர். இந்நிலையில் கடந்த 3ம் ேததி, இளம்பெண் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். அவரது கணவர், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பெட்ரூமில் அவர் கட்டிய தாலி மற்றும் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில், ‘‘எனக்கு கணவருடன் வாழ பிடிக்கவில்லை. அதனால்தான், தாலியை கழற்றி வைத்திருக்கிறேன். நான், எனக்கு பிடித்த பெண்ணுடன் செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்,’’ என எழுதப்பட்டிருந்தது. இக்கடிதத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன், கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். போலீசார் இளம்பெண் மாயம் என வழக்குப்பதிவு செய்தனர். அடுத்த சில மணி நேரத்தில் இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த பெண்ணின் கணவரும் வந்து அங்கு புகார் கொடுத்தார். அதன்பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், அருகருகே வசித்தபோது 3 குழந்தைகளின் தாயுடன் அந்த இளம்பெண் லெஸ்பியன் உறவு வைத்துக் கொண்டு, ஏற்கனவே ஒரு முறை ஓட்டம் பிடித்ததும், தற்போது 2வது முறையாக ஓட்டம் பிடித்திருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த முறை இருவரும் ஓடியபோது, உறவினர்கள் மீட்டு வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, 3 குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கணவருடன் வாழும்படி 39 வயது கொண்ட அப்பெண்ணிற்கு அறிவுரை கூறியுள்ளனர். அதன்பேரில்தான், அவர்கள் வசித்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். தற்போது, மீண்டும் ஓட்டம் பிடித்துள்ள லெஸ்பியன் ஜோடியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post லெஸ்பியன் உறவால் 2வது முறையாக 3 குழந்தைகளின் தாயுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்: கடிதத்துடன் தாலியை வைத்து கணவனுக்கு அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: