கிருமாம்பாக்கத்தில் பரபரப்பு நாட்டு வெடிகுண்டுகளுடன் 3 பேர் அதிரடி கைது

பாகூர் : கிருமாம்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டுகளுடன் 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கிருமாம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்த 3 பேர் அதே பகுதியில், சந்தேகத்திற்கு இடமாக நிற்பதாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது 3 பேர் அங்கு நின்று இருந்ததும் அதில் ஒருவர் கையில், சணல் பை ஒன்று வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். இதில் கிருமாம்பாக்கம் இந்திராநகரை சேர்ந்த ஜார்ஜ் பெர்ணான்டஸ் (22), சந்துரு (21), ஸ்ரீதர் (எ) ஸ்ரீ(21) என தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக ஜார்ஜ் பெர்னாண்டஸை தாக்கிய அதே பகுதியை சேர்ந்த ரூபன் என்பவரை மிரட்டுவதற்காக அந்த வெடிகுண்டுகளை எடுத்துச் சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து,. வெடிகுண்டுகளை கைப்பற்றினர்.

The post கிருமாம்பாக்கத்தில் பரபரப்பு நாட்டு வெடிகுண்டுகளுடன் 3 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: