அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

கும்மிடிப்பூண்டி: மாதர்ப்பாக்கம் அருகே உள்ள மாந்தோப்பில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி அடுத்த கரடிப்புத்தூர் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பல தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இந்நிலையில், ராஜேந்திரன் என்ற தனிநபருக்கு சொந்தமான மாந்தோப்பில் உள்ள பயனில்லாத கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக பாதிரிவேடு போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிந்தனர். உடனே, விரைந்து வந்த போலீசார் அழகிய நிலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்றை கண்டெடுத்தனர். பின்னர், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், இறந்தவர் யார்? கிணற்றில் தவறி விழுந்தாரா அல்லது கிணற்றில் தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: