கிளையில் சிக்கி கை முறிந்ததால் மாமரத்தில் ஏறிய வாலிபர் இறங்க முடியாமல் தவிப்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

புழல்: மரத்தில் ஏறும் போது கிளையில் சிக்கி கை முறிந்துவிட்டதால் இறங்க முடியாமல் தவித்த வாலிபரை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனர்.
சென்னை புழல் அடுத்த லட்சுமிபுரம், கல்பாளையம் காந்திஜி தெருவை சேர்ந்தவர் சங்கர பாண்டியன். இவருடைய வீட்டின் பின்புறம் 40 அடி உயரத்தில் மாமரம் உள்ளது. இந்த மரத்தில் சங்கரபாண்டியன் மகன் ஆனந்தகுமார்(29) நேற்று மதியம் மரத்தின் மேல் ஏறி, மாங்காய் பறித்த போது, மரக்கிளையில் சிக்கி கை முறிந்தது. இதனால் அவர் கீழே இறங்க முடியாமல் அவதிப்பட்டார். இவருடைய அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து ஆனந்தகுமாரை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. எனவே இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சென்னை வடக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் லோகநாதன் தலைமையில் கொளத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் மேற்பார்வையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரோப் கயர்களை போட்டு மரத்தில் ஏறி பாதுகாப்புடன் ஆனந்த குமாரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கிளையில் சிக்கி கை முறிந்ததால் மாமரத்தில் ஏறிய வாலிபர் இறங்க முடியாமல் தவிப்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் appeared first on Dinakaran.

Related Stories: