பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சிறுவர் அறிவியல் பூங்காவிற்கு மின்விளக்கு வசதி

பெரம்பலூர்: பெரம்பலூர் கலெக்டர் அலு வலக சிறுவர் அறிவியல் பூங்காவிற்கு மின்விளக்கு வசதிகள் செய்து தர வேண் டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்ட கலெ க்டர் அலுவலகம் முன்பு சிறுவர் அறிவியல் பூங்கா உள்ளது. பெரம்பலூர் மாவ ட்ட கலெக்டராக தரேஷ் அக மது இருக்கும் போது, சிறுவர் பூங்காவாக அமைக்கப்பட்ட இந்த பூங்கா அடுத்து வந்த கலெக்டர் நந்தகுமாரால் சிறுவர் அறி வியல் பூங்காவாக மாற்றப் பட்டது. மாவட்ட தலைநக ராக விளங்கிவரும் பெரம் பலூர் நகரில் பொதுமக்க ளுக்கு அரசு அலுவலர்க ளுக்கு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பொழுதுபோக்கு அம்சங் கள் எதுவுமே இல்லாமல் உள்ளது. பெரம்பலூர் நகரில் நான்கு திரையரங்கம் மட்டுமே உள் ளது. எப்போதாவது ஆண்டு க்கு ஒருமுறை,அதுவும் ஒரு மாதத்திற்கு பொருட்காட்சி அமைத்தால் மட்டுமே நகர மக்கள் மாலை நேரங்களில் மனதுக்கு இதமாக, மன உளைச்சலைபோக்கும் விதமாக நேரத்தை செலவிட பயன்படுத்தி வருவார்கள். மற்றபடி இதர மாதங்களில் மனதிற்கு இதமாக நேரத் தை செலவிட ஏதுவான இ டம் எங்குமே அமைக்கப்பட வில்லை. இதனால் பெரம்ப லூர் நகர வாசிகள் வெளி மாவட்ட சுற்றுலாத்தலங்க ளையே நாடிச் செல்லும் நிலை உள்ளது.

இந்நிலையில் இதற்கு சிறு தீர்வாகமட்டுமே இந்த சிறு வர் அறிவியல் பூங்கா விள ங்கி வருகிறது. இந்த பூங் காவிற்கு மாலை 4 மணி முதல் மக்கள் கூட்டம் வரத் தொடங்குகிறது இரவு 8 மணி வரை இந்த பூங்கா வில் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் தங்கள் பிள் ளைகள் குடும்பத்துடன் வந் து நேரத்தைசெலவு செய்து நிம்மதியாகச் செல்கின்ற னர். ஆனால் சில மாதங்க ளாக இந்த சிறுவர் அறிவி யல் பூங்காவில் அமைக்கப் பட்டுள்ள மின்விளக்குகள் எரியாததால் பொழுது போக்க, சிறு வர் பூங்கா வருபவர்கள் வேதனை அடைந்து வருகின்றனர். எரியாத மின்விளக்குகள் எரிவதற்கும் இதனால் சிறுவர் அறிவியல் பூங்கா குப்பைகள் இன்றி தூய்மை யாகவும், குடிநீர் வசதியுடன் அமைக்கப்பட்டு பொதுமக் கள் பயன்பாட்டிற்கு உகந்த இடமாக இருப்பதற்கு மாவ ட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சிறுவர் அறிவியல் பூங்காவிற்கு மின்விளக்கு வசதி appeared first on Dinakaran.

Related Stories: