ஜூன் 7ல் பள்ளிகள் திறப்பு சீருடை விற்பனை தீவிரம்

 

ஈரோடு, ஜூன் 5: தமிழகத்தில் நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பதையொட்டி சீருடை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறைக்குப் பின்னர் வரும் 7ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், மாணவ, மாணவிகளுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்களை வாங்குவதில் பெற்றோர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். நேற்று, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன கடை வீதிக்கு சென்று சீருடை, நோட்டு புத்தகங்கள், புத்தகப்பை உள்ளிட்ட பொருள்களை வாங்குவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

குறிப்பாக, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா,மணிக்கூண்டு,ஆர்.கே.வி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் பள்ளிச் சீருடைகள் வாங்க பெற்றோர்கள் குவிந்தனர். மேலும், ஸ்டேஷ்னரி பொருள்கள் விற்பனையும் அதிக அளவில் நடைபெற்றது. புது பேனா,பென்சில் அவற்றை பாக்ஸ் போன்றவற்றை மாணவ, மாணவிகள் வாங்கினர். இதனால், ஈரோடு நகர கடை வீதியில் நேற்று பெற்றோர்,மாணவ, மாணவிகளின் கூட்டம் அலை மோதியது.

The post ஜூன் 7ல் பள்ளிகள் திறப்பு சீருடை விற்பனை தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: