போக்குவரத்து விதிகளை மீறிய 912 வாகன ஓட்டிகள் மீது வழக்கு: 20 பேரின் லைசன்ஸ் ரத்து செய்ய பரிந்துரை

 

ஈரோடு,ஜூன்5: ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். இதன்படி, ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் கடந்த மாதம்(மே) ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா,பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு, காளைமாட்டு சிலை,கலெக்டா் அலுவலகம் சந்திப்பு,மூலப்பாளையம் சந்திப்பு,கொல்லம்பாளையம், சூரம்பட்டி நால் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இதில், மதுபோதையில் வாகனங்களை இயக்கியதாக 67 வழக்கு,செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்கியதாக 6 வழக்கு, டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 598 வழக்கு,ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் இயக்கியதாக 120 வழக்கு, காப்பீடு இல்லாமல் வாகனம் இயக்கியதாக 58 வழக்கு,டூவீலரில் மூவர் பயணித்ததாக 14 வழக்கு, விபத்து ஏற்படும் வகையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதாக 2 வழக்கு மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 912 வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

இதில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 42 பேர் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை தலா ரூ.10 ஆயிரம் என ரூ.4லட்சத்து 20 ஆயிரம் செலுத்தி விட்டதாகவும், கடந்த மாதம் போக்குவரத்து விதியை மீறி இயக்கிய 20 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை (லைசன்ஸ்) ரத்து செய்திட வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரைக்கப்பட உள்ளதாக தெற்கு போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

The post போக்குவரத்து விதிகளை மீறிய 912 வாகன ஓட்டிகள் மீது வழக்கு: 20 பேரின் லைசன்ஸ் ரத்து செய்ய பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: