மக்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதை விட வெறுப்பு அரசியலை விதைப்பதில் கவனம் செலுத்தும் ஒன்றிய அரசு: திருமாவளவன் எம்.பி. கண்டனம்

அவனியாபுரம்: ஒன்றிய அரசு மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதை விட, வெறுப்பு அரசியலை விதைப்பதிலேயே அதிகக் கவனம் செலுத்துகிறது என மதுரையில் திருமாவளவன் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். மதுரை வந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி, விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: ஒடிசா ரயில் விபத்து உலகளவில் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள தலைக்குனிவு. ஒன்றிய அரசு மக்கள் நலனை கருத்தில் கொள்வதைவிட, மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதை விட வெறுப்பு அரசியலை விதைப்பதில் தான் அதிகக் கவனம் செலுத்துகிறது. முக்கியமான அனைத்துத்துறைகளையும் தனியாருக்கு தாரைவார்க்க வேண்டும் என்கிற கொள்கையை கொண்டிருக்கும் மோடி அரசு, ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதின் விளைவாகத்தான் புதிய பணியாளர் நியமனம் போன்றவற்றை செய்யவில்லை. அதனால்தான் இக்கோர விபத்து ஏற்பட்டிருக்கிறது என்கிற தார்மீக கருத்தை ஏற்று ரயில்வே துறை அமைச்சராவது பதவி விலக வேண்டும்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து ஆணவக்கொலை நடப்பதற்கு காரணமாக இருப்போருக்கு சம்மட்டி அடியை கொடுத்து இருக்கிறது. உயர்நீதிமன்ற நீதிநாயகர்கள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் வழங்கியுள்ள இத்தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மேகதாது அணை கட்டுவதால் பாதிப்பு ஏற்படும் என நாம் உரத்துப் பேசுவோம். காவிரி மேலாண்மை ஆணையம் இதற்கு விடைசொல்லி இருக்கிறது. எங்கள் அனுமதியில்லாமல் யாரும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

The post மக்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதை விட வெறுப்பு அரசியலை விதைப்பதில் கவனம் செலுத்தும் ஒன்றிய அரசு: திருமாவளவன் எம்.பி. கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: