கட்சி வரவு செலவில் முறைகேடு புகார் நாதக நிர்வாகிகள் மோதல் 2 பேருக்கு சரமாரி அடி: 18 பேர் மீது வழக்குப்பதிவு

நாகர்கோவில்: நாகர்கோவில் கோட்டார் ஊட்டுவாழ்மடம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகர செல்வன் (34). நாம் தமிழர் கட்சி 26வது வார்டு செயலாளர். இவர் நேற்று முன்தினம் வடசேரியில் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கட்சி வரவு, செலவு கணக்கில் முறைகேடு நடந்துள்ளது என்று ஹரிகர செல்வன் குற்றம்சாட்டினார். இதில் கைகலப்பு ஏற்பட்டு நாகர்கோவில் டவுன் செயலாளர் பெல்வின், தொகுதி செயலாளர் விஜயராகவன், ஜெயரின் உட்பட 18 பேர் ஹரிகர செல்வனை தாக்கினர். தடுக்க வந்த சதீஷ்குமாருக்கும் அடி விழுந்தது. புகாரின் பேரில் நிர்வாகிகள் உட்பட கட்சியினர் 18 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வடசேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post கட்சி வரவு செலவில் முறைகேடு புகார் நாதக நிர்வாகிகள் மோதல் 2 பேருக்கு சரமாரி அடி: 18 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: