தொலைக்காட்சி, ரேடியோவில் வானிலை எச்சரிக்கை அறிவிப்புகள்: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு

புதுடெல்லி: தொலைக்காட்சி, ரேடியோவில் வானிலை எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடுவதற்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவெடுத்துள்ளது. கன மழை, இடியுடன் கூடிய பலத்த மழை,வெப்ப அலை போன்ற தகவல்கள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கும் விதமாக செல்போன்களுக்கு தகவல் அனுப்பும் முறையை தேசிய பேரிடர் மீட்பு ஆணையம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போது தொலைக்காட்சி, ரேடியோக்களிலும் இது போன்ற தகவல்கள் அனுப்பும் முறையை விரைவில் செயல்படுத்துவதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரி கூறுகையில்,‘‘இரண்டாம் கட்டமாக தொலைக்காட்சி, ரேடியோக்களில் வானிலை அறிவிப்புகள் வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில் இது அறிமுகப்படுத்தப்படும். கடந்த 2021ம் ஆண்டு இது தமிழ்நாட்டில் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்ட பின் நாடு முழுவதும் இதை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு உள்ளூர் மொழி உள்பட 2 மொழிகளில் வெளியாகும்’’ என்றார்.

* ஒரே ஆண்டில் 2770 பலி

கடந்த ஆண்டு மின்னல் தாக்கி 1580 பேர் பலியாகி உள்ளனர். மழை, வௌ்ளத்துக்கு 1050 பேரும் பலியாகி உள்ளனர். 140 பேர் வெப்பத்துக்கு பலியாகி உள்ளனர் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தொலைக்காட்சி, ரேடியோவில் வானிலை எச்சரிக்கை அறிவிப்புகள்: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: