கல்லூரி மாணவி தற்கொலை சாதியை காட்டி திருமணம் செய்ய மறுத்த காதலன் கைது

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே இடுஹட்டி தொட்டண்ணி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ், கூலி தொழிலாளி. இவருடைய மகள் பிரியதர்ஷினி (19). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் வீட்டுக்கு வந்தவர் யாரிடமும் சரியாக பேசவில்லை. பின்னர் கடந்த 30ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசாருக்கு தெரிவிக்காமல் மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிரியதர்ஷினியின் செல்போனை பெற்றோர் சோதனை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் (32) என்பவருடன் சமூக வலைத்தளம் மூலம் பேசி பழகியது தெரியவந்தது. இது குறித்து புகாரின்படி கோத்தகிரி போலீசார் நந்தகுமாரை பிடித்து விசாரித்தனர். அப்போது பிரியதர்ஷினியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகியதும், வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் செய்ய நந்தகுமார் மறுத்ததும் அதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்து நந்தகுமாரை கைது செய்தனர். மாணவி தற்கொலையை மறைத்து அடக்கம் செய்ததாக பெற்றோர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

The post கல்லூரி மாணவி தற்கொலை சாதியை காட்டி திருமணம் செய்ய மறுத்த காதலன் கைது appeared first on Dinakaran.

Related Stories: