வில்லிவாக்கத்தில் லிப்ட் கேட்டு பைக்கில் ஏறிய சிறுவனுக்கு பாலியல் சீண்டல்: பாஜக பிரமுகர் கைது

அம்பத்தூர்:வில்லிவாக்கத்தில் லிப்ட் கேட்டு பைக்கில் ஏறிய பள்ளி சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வில்லிவாக்கம் சிவன் கோயில் பகுதியில் நேற்று இரவு சிறுவன் ஒருவன் அழுதுகொண்டிருந்தான். இதைபார்த்த அப்பகுதியினர் சிறுவனிடம் விசாரித்தனர். அப்போது சிறுவன், தான் வில்லிவாக்கத்தில் உள்ள பள்ளியில் படிப்பதாகவும், லிப்ட் கேட்டு ஒருவரின் பைக்கில் ஏறிவந்ததாகவும் கூறியுள்ளான். மேலும் அவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளான்.

இதையடுத்து அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் சிறுவன் கூறியதை வீடியோ எடுத்து வைத்துகொண்டு சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து திட்டியுள்ளார். சிறுவன் கூறிய சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இது வேகமாக பரவி வருகிறது. இதையறிந்த வில்லிவாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவனின் பெற்றோர் முதலில் புகார் அளிக்க அச்சப்பட்டு பின்னர் புகார் செய்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாடி குமரன்நகர் பகுதியை சேர்ந்த அம்பத்தூர் மேற்கு பகுதி பாஜக பூத் கமிட்டி உறுப்பினர் பாலச்சந்தர் (47) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோன்று எத்தனை சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வில்லிவாக்கத்தில் லிப்ட் கேட்டு பைக்கில் ஏறிய சிறுவனுக்கு பாலியல் சீண்டல்: பாஜக பிரமுகர் கைது appeared first on Dinakaran.

Related Stories: