“நெருக்கமாக உள்ள படத்தை வெளியிடுவேன்’’ என்று மிரட்டி சிகிச்சைக்கு வந்த பெண்ணை பலாத்காரம் செய்த டாக்டர்: விடுதியில் வைத்து தொடர்ந்து அத்துமீறல்

திருவொற்றியூர்:‘’நெருக்கமாக உள்ள புகைப்படத்தை வெளியிடுவேன்’’ என்று மிரட்டி சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அனல்மின் நிலைய ஓய்வுப்பெற்ற ஊழியர்.

இவர் கடந்த 2019ம் ஆண்டு பணியில் இருக்கும்போது அனல்மின் நிலைய அலுவலகத்தில் உள்ள மின்வாரிய மருத்துவமனையில் ஒப்பந்த மருத்துவராக தண்டையார்பேட்டை சோலையப்பன் தெருவை சேர்ந்த டாக்டர் சபரி மோகன்(32) என்பவர் பணியில் சேர்ந்தார். அப்போது அனல் மின் நிலைய ஊழியரின் 28 வயது மகளுக்கு உடல் ரீதியான சிகிச்சைக்காக டாக்டர் மோகனை அணுகியுள்ளனர். அடிக்கடி சிகிச்சைக்கு வந்து சென்றதால் மருத்துவருக்கும் அந்த பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டு நெருக்கமானது. இந்த நிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அந்த பெண் கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் அதற்கு டாக்டர் மறுப்பு தெரிவித்ததுடன் பெண்ணை தொடர்ந்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவே கோபம் அடைந்த டாக்டர், ‘நான் உன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை செல்போனில் வைத்திருப்பதாகவும் என் ஆசைக்கு இணங்க மறுத்தால் அதை இணையதளத்தில் வெளியிடுவேன்’ என்று மிரட்டியதுடன் அந்த பெண்ணை கோயம்பேட்டில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச்சென்று ஆசைக்கு இணங்க சொல்லி மீண்டும், பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், காவல் நிலையத்தில் புகார் செய்யப்போகிறேன் என்று கூறியதால், ‘’ உன்னை நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன்’’ என்று டாக்டர் அந்த பெண்ணிடம் சத்தியம் செய்து உறுதி அளித்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த மாதம் ஏப்ரல்: மாதம் 4ம் தேதி சேலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் டாக்டருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதுபற்றி தெரிந்ததும் பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது பெற்றோருடன் எண்ணூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பெண்ணுக்கு செல்போனில் அனுப்பிய பதிவுகளையும் உரையாடல்களையும் வைத்து டாக்டர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால் வழக்குபதிவு செய்து 40 நாட்களுக்கு மேல் ஆகியும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் இதுசம்பந்தமாக மகளிர் ஆணையத்தில் பெண்ணின் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தப்படுகிறது. ‘’திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர் சபரிமோகனை கைது செய்யவேண்டும்’ என்று பெண்ணின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post “நெருக்கமாக உள்ள படத்தை வெளியிடுவேன்’’ என்று மிரட்டி சிகிச்சைக்கு வந்த பெண்ணை பலாத்காரம் செய்த டாக்டர்: விடுதியில் வைத்து தொடர்ந்து அத்துமீறல் appeared first on Dinakaran.

Related Stories: