சென்னையில் உள்ள புரோக்கர்களுக்கு விற்பனை செய்ய மாடலிங் பெண்ணை காரில் அழைத்து வந்த பிரபல பாலியல் புரோக்கர் கைது:

சென்னை: சென்னையில் உள்ள பாலியல் புரோக்கர்களுக்கு விற்பனை செய்ய வடமாநில மாடலிங் பெண்ணை காரில் அழைத்து வந்த பிரபல பாலியல் புரோக்கரை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து ஒரு கார், 10 செல்போன்கள், 2 ஸ்வைபிங் மெஷின், 37 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் புரோக்கர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி ரகசிய தகவலின் படி விபச்சார தடுப்பு பிரிவு-2 இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் மடிப்பாக்கம் சாஸ்திரி நகர், பஜார் மெயின் ரோடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சாலையோரம் கார் ஒன்று வெகு நேரம் நின்று கொண்டிருந்தது. இதை கவனித்த விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் காரின் அருகே ெசன்று, காரில் இருந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் காரில் அமர்ந்து இருந்த இளம் பெண்ணிடம் விசாரணை நடத்திய போது, காரில் இருந்த நபர், வெளிமாநிலத்தில் இருந்து மாடலிங் பெண்ணை அழைத்து வந்து சென்னையில் உள்ள பாலியல் புரோக்கர்களுக்கு விற்பனை செய்ய காத்திருந்தது தெரியவந்தது.

உடனே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கர்நாடகா மாநிலம் பெங்களூரு சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த பிரபல பாலியல் புரோக்கர் ஷேக் சோமன்(எ)சால்மன்(42) என தெரியவந்தது.
இவர், வெளிமாநிலங்களை சேர்ந்த மாடலிங் பெண்கள், வேலை தேடும் இளம் பெண்களுக்கு அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து சென்னையில் உள்ள பாலியல் புரோக்கர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுபோல் சால்மன் சென்னையில் உள்ள பாலியல் புரோக்கர்களுக்கு 100க்கும் மேற்பட்ட இளம் பெண்களை விற்பனை செய்தது இருப்பதும் விசாரணை மூலம் உறுதியானது. இவர் மீது சென்னையில் பல்வேறு பாலியல் வழக்குகளும் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

அதைதொடர்ந்து பிரபல பாலியல் புரோக்கர் ஷேக் சோமன்(எ)சால்மனை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது ெசய்தனர். அவனிடம் இருந்து வெளிமாநிலத்தில் இருந்து விற்பனைக்கு அழைத்து வரப்பட்ட மாடலிங் பெண் மீட்கப்பட்டார். மேலும், பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய ஒரு சொகுசு கார், 10 செல்போன்கள், 2 ஸ்வைபிங் மெஷின், 37 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சால்மனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், மீட்கப்பட்ட மாடலிங் பெண் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

The post சென்னையில் உள்ள புரோக்கர்களுக்கு விற்பனை செய்ய மாடலிங் பெண்ணை காரில் அழைத்து வந்த பிரபல பாலியல் புரோக்கர் கைது: appeared first on Dinakaran.

Related Stories: