சேலம், ஜூன் 4: மாநகராட்சி, நகராட்சிகளில் 3 குடியிருப்புகள் அல்லது 12 மீட்டர் உயரம் வரையுள்ள அனைத்து வீடுகளுக்கும் கட்டிட முடிவு சான்று இல்லாமல் மின் இணைப்பு வழங்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி, நகராட்சிகளில் புதிதாக வீடு கட்ட நகரமைப்பு பிரிவில் அனுமதி பெற்ற பின்னரே கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அனுமதி ெபறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டால், அந்த கட்டிடங்களுக்கு, கட்டிட முடிவு சான்றை நகரமைப்பு பிரிவில் இருந்து பெற்று பின்னரே குடிநீர், மின் இணைப்பு வழங்கப்படுகிறது. தற்போது ஒரு சில விதிமுறைகளுக்கு உட்பட்ட கட்டிடங்களுக்கு, கட்டிட முடிவு சான்று இல்லாமல் மின் இணைப்பு வழங்கலாம் என நகராட்சி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 12 மீட்டர் உயரம் வரை உள்ள3 குடியிருப்புகள் அல்லது 750சதுர மீட்டர் பரப்பளவிற்கு உட்பட்ட அனைத்து வீடுகள் மற்றும்அனைத்து தொழிற்சாலைகள் கட்டிடங்கள் இருப்பினும், நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் கட்டிடம் கட்டி முடிவு பெற்ற பின் மின் இணைப்பு வசதி பெறுவதில் கால தாமதம் ஏற்படுவதாக பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்ற வண்ணம் உள்ளது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகளின் படி, இந்த கட்டிடங்களுக்கு கட்டிட முடிவு சான்று இன்றி மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய் வசதி மற்றும் பாதாள சாக்கடை வசதி முதலான இணைப்புகள் வழங்கலாம். இது தொடர்பாக அனைத்து மாவட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.
The post வீடுகளுக்கு மின் இணைப்பு appeared first on Dinakaran.