ஒடிசா ரயில் விபத்து.. உயர்மட்டக் குழு விசாரணைக்கு பிறகே விபத்துக்கான காரணம் குறித்து தெரிய வரும் :ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

புபனேஷ்வர் : ஒடிசா ரயில் விபத்து குறித்து தன்னிச்சையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் விசாரணை நடத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஒடிசா ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. கோரமண்டல், ஹவுரா விரைவு ரயில்களும் சரக்கு ரயிலும் ஒன்றின் மீது ஒன்று மோதிய விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில், 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் விபத்து நடந்த ஒடிசாவின் பாலாஷோர் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ மீட்பு பணிகள் சவாலாக உள்ளது; மீட்பு, நிவாரண பணிகளில் மட்டுமே தற்போது முழு கவனம் செலுத்தி வருகிறோம். ரயில்வே துறை, மத்திய, மாநில பேரிடர் படைகள், தீயணைப்பு குழு மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்; விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகே விபத்துக்கான காரணம் குறித்து தெரிய வரும். விபத்தில் காயம் அடைந்தோருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஒடிசா ரயில் விபத்து குறித்து தன்னிச்சையாகவும், வெளிப்பகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மீட்பு பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இக்கட்டான சூழலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருப்போம்,”என்றார்

இதனிடையே ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 கருணை இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஒடிசா ரயில் விபத்து.. உயர்மட்டக் குழு விசாரணைக்கு பிறகே விபத்துக்கான காரணம் குறித்து தெரிய வரும் :ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் appeared first on Dinakaran.

Related Stories: