கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி, ஜூன் 3: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: கருணாநிதியின் 100வது பிறந்த நாள் விழா இன்று (3ம் தேதி), கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இன்று காலை 8 மணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கொடியேற்ற கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். தொடர்ந்து கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து கிருஷ்ணகிரி நகர திமுக சார்பில், நகர செயலாளர் நவாப் ஏற்பாட்டின் பேரில், புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகில் கொடியேற்றி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, நலஉதவிகள் வழங்கப்படும்.

கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய செயலாளர் தனசேகர் ஏற்பாட்டின் பேரில், ராயக்கோட்டை சாலை மேம்பாலம் அருகில் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள், நல உதவிகள் வழங்கப்படும். தொடர்ந்து கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் கோவிந்தன் ஏற்பாட்டின் பேரில், கிருஷ்ணகிரி- சேலம் ரோடு, ஆவின் பால் பண்ணை அருகே திமுக கொடியேற்றி, கேக் வெட்டி, நலஉதவிகள் வழங்கப்பட உள்ளது. காவேரிப்பட்டணத்தில் பேரூர் செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, மகேந்திரன் ஏற்பாட்டின் பேரிலும், பர்கூரில் பேரூர் செயலாளர் வெங்கடப்பன் ஏற்பாட்டில் நலஉதவிகள் வழங்கப்பட உள்ளன.

நிகழ்ச்சிகள் முடிந்தவுடன், சென்னையில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகள், முன்னாள் எம்பி, எம்எல்ஏ.,க்கள், மூத்த முன்னோடிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அனைத்து நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், மாவட்ட ஊராட்சி குழு, ஒன்றிய குழு, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் தவறாமல் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சென்னைக்கு பயணமாக வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: