திருக்கல்யாண உற்சவம்

கிருஷ்ணகிரி, ஜூன் 3: கிருஷ்ணகிரி அடுத்த பொன்மலை சீனிவாசபெருமாள் கோயிலில் நேற்று 2ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த பொன்மலை சீனிவாச பெருமாள் கோயிலில், 2ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம், கடந்த 31ம் தேதி சுமங்கலி மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சி, பந்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 1ம்தேதி இரவு ஸ்தல சுத்தி, கோ பூஜை உள்ளிட்டவை நடந்தன. நேற்று காலை 9 மணிக்கு திருமண நிச்சயதார்த்தம், காலை 10.15 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், தாயாருக்கு கவுரி பூஜை, காசி யாத்திரை, மாங்கல்ய தாரணம், அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் தேவி, பூதேவி சமேதராக கல்யாண சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் விருந்தும், மாலை 4 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், மாலை 6 மணிக்கு திருச்சுற்று பல்லக்கு சேவையும், பிரசாத விநியோகமும் நடைபெற்றன. இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post திருக்கல்யாண உற்சவம் appeared first on Dinakaran.

Related Stories: