தேங்காய் விலை வீழ்ச்சி

செங்கோட்டை: தென்னைய பெத்தா இளநீரு, பிள்ளையப் பெத்தா கண்ணீரு என்று பழமொழி கூறுவார்கள். தென்காசி மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இவற்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சுமார் 50 லட்சம் தேங்காய் பறிக்கப்பட்டு அவை வியாபாரிகளிடம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு 1 கிலோ தேங்காய் விலை ரூ.50 முதல் ரூ.55க்கு வரை விற்பனை செய்யப்பட்டது. இது ஓரளவிற்கு தென்னை விவசாயிகளுக்கு அதிக லாபம் தராவிட்டாலும் நஷ்டத்திலிருந்து தப்ப உதவியது. ஆனால் தற்போது ஒரு கிலோ தேங்காய் ரூ.21 முதல் ரூ.25 வரை விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

The post தேங்காய் விலை வீழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: