பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் பலி கலெக்டர், எஸ்.பி.க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: சேலம் அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 1ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் சதீஷ்குமார், நடேசன், பானுமதி ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும், விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

The post பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் பலி கலெக்டர், எஸ்.பி.க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: