உலக சந்தை விலைக்கு ஏற்ப சமையல் எண்ணெய் லிட்டருக்கு ரூ.12 வரை குறைக்க வேண்டும்: ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: உலக சந்தை விலைக்கு ஏற்ப சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.12 வரை குறைக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தலைமையில், தொழில்துறை பிரதிநிதிகளுடன் டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் உலக சந்தை விலையில் சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்தும் இந்தியாவில் விலை குறைக்கப்படாமல் இருப்பது ஆலோசனை நடத்தப்பட்டது.

குறிப்பாக சில நிறுவனங்களின் எம்ஆர்பி விலை அளவுக்கு அதிகமாக இருப்பது குறித்து உணவுத்துறை செயலாளர் கவலை தெரிவித்தார். இதையடுத்து அவர் சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.18 முதல் ரூ.12 வரை உடனடியாக குறைக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். கடந்த இரண்டு மாதங்களில் பல்வேறு சமையல் எண்ணெய்களின் விலைகள் டன்னுக்கு ரூ.16,500 வரை குறைந்துள்ளது. கடந்த மாதம் இதுகுறித்து அறிவித்து விலை குறைக்க உத்தரவிடப்பட்டது. அப்போது சில நிறுவனங்கள் ரூ.5 முதல் ரூ.15 வரை விலையை குறைத்தன.

The post உலக சந்தை விலைக்கு ஏற்ப சமையல் எண்ணெய் லிட்டருக்கு ரூ.12 வரை குறைக்க வேண்டும்: ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: