செயின் பறிப்புக்கு எதிராக ஒரு நாள் சிறப்பு தணிக்கையில் 559 வழிப்பறி கொள்ளையர்களை பிடித்து விசாரணை; 17 பேர் கைது

சென்னை: செயின், செல்போன் பறிப்புக்கு எதிரான சிறப்பு ஒரு நாள் தணிக்கையில் சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 559 வழிப்பறி கொள்ளையர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையை குற்றம் இல்லாத மாநகரமாக மாற்றும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகைளில் ‘செயின், செல்போன் பறிப்பு, வீடு புகுந்து திருடுதல்’ குற்றத்திற்கு எதிராக நேற்று முன்தினம் மாநகர காவல் எல்லையில் போலீசார் சிறப்பு தணிக்கை நடத்தினர்.

இந்த சிறப்பு தணிக்கையில், சென்னை மாநகர எல்லையில் பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, வீடு புகுந்து திருடுதல் போன்ற குற்ற வழக்கில் தொடர்புடைய 559 வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் அவர்கள் இருப்பிடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த 17 வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்தனர். சென்னையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 609 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

The post செயின் பறிப்புக்கு எதிராக ஒரு நாள் சிறப்பு தணிக்கையில் 559 வழிப்பறி கொள்ளையர்களை பிடித்து விசாரணை; 17 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: